பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

காட்டித்தான் மேற்சொன்ன தோற்றத்தை உண்டாக்குகிறது.

உதாரணமாக, சிரங்கு சொறிதல், காது குடைதல் போன்ற உணர்ச்சியையும் அடிபடல், ஆயுதம் படல் போன்ற உணர்ச்சியையும், ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னையது, தோலிலுள்ள சின்னஞ் சிறிய உயிர் உள்ள அறைகள் (cells) விரும்பத் தக்கதாயும், பின்னையது அவ்வறைகள் வெறுக்கத்தக்கதாயும் இருக்கிறது. இந்த விருப்போ அன்றி வெறுப்போ ஆன எழுச்சிகள், உணர்ச்சி நரம்புகளால், மேற்சொன்ன அறைகளுக்குத் தொடர்புடையனவும், மூளையில் இருப்பனவுமான அறிவறைகளுக்கு அறிவிக்கப்படுகின்றன. அவ்வறிவறைகளிலிருந்து அதன் அடுத்துள்ள எண்ணத்துக்குத் தோன்றும் தோற்றமே, முன்னையது இன்பமாயும் பின்னையது துன்பமாயும் தோன்றும் தோற்றங்கள். இதுபோலவேதான், வாய், கண், மூக்கு, செவி, அறிவு ஆகியவற்றின் விருப்பு வெறுப்பு எழுச்சிகள், எண்ணத்திற்கு இன்ப துன்பத் தோற்றங்களை உண்டாக்குகின்றன.

இவைகளை ஏன் தோற்றங்கள் என்கின்றோமெனின்; விளக்குதும். ஒழுங்கல்லாத முறையில், ஒரு பெண்ணும் ஆணும் கூடி இருக்கின்றனர். இதை மணமாகாத அன்னிய வாலிபன் ஒருவன், மறைந்திருந்து பார்த்து மனமகிழ்கிறான். ஆனால் அதை அப்பெண்ணின் கணவனோ அல்லது உடன்