பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் சென்றாலும் பின் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். கார்ட்டன் துரை மகனாரின் நல்லெண்ணம் போல லட்சுமி நரசிம்முலு பச்சையப்பர் அறநிலையத்தின் காவலர்களுள் ஒருவராக 1854-ஆம் ஆண்டிலேயே-நார்ட்டன் துரை தம் கருத்தை வெளியிட்ட அந்த ஆண்டிலேயேநிகியமனம் பெற்றார் 1857-ஆம் ஆண்டில் வடநாட்டில் புகழ் பெற்ற சிப்பாய்கள் புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பின் சென்னைச் சுதேசிச் சங்கத்தின் தலைவராய் விளங்கிய லட்சுமி நரசிம்முலு, இங்கிலாந்து அரசாங்கம் மதத் துறையில் தொடர்ந்து நடுவுநிலைமைப் பாதையைப் பின்பற்ற வேண்டுமென்ற ஒரு விண்ணப்பத்தை அனுப்பினார் அது இங்கிலாந்து நாட்டு அறிஞர் களால் ஆர்வத்துடன் படிக்கப் பெற்றது; ஆதர வான பதிலேயும் பெற்றது. காலம் மாறத் தொடங்கியது. திரு. லட்சுமி நரசிம்முலுவைப்பற்றி அரசாங்கத்தினர் கொண்டிருந்த பல தவறான கருத்துக்களும் மாயத்| தொடங்கின. ஐரோப்பிய மக்களும் இந்திய மக்களும் அவரை ஒருசேரப் போற்றுவதைக் கண்ட அரசாங்கம், தன் பகை நோக்கை மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டது; நாட்டுக்காக அவர் செய்த நற்பணிகளைப் போற்றும் வகையில், 1861-ஆம் ஆண்டில் சி. எஸ். ஐ." என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியது; 1863-ஆம் ஆண்டில் சென்னைச் சட்ட மன்றத்தின் மேல் சபையின் உறுப்பினராகவும் செய்தது. வழக்கம் போலப் பச்சையப்பர் கல்லூரியின் ஆண்டு விழாவில் பேச நேர்ந்த போது,