பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

யாமல், “குன்று தோறாடல்“ என்னும் பொதுத் தலைப்பில் அடங்கட்டும் என விட்டிருக்கலாம். ஆக, நக்கீரர் வேங்கட மலையை விட்டு விட்டதற்கு உரிய காரணம் இப்போது விளங்கலாம்.

கந்த வேள் கதையமுதம்

இதுகாறும் கூறிய செய்திகளுள் சிவவற்றின் சுருக்கத் தொகுப்பு போல், பெரியவர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதி 1980 சூலைத் திங்களில் வெளியிட்ட 'கந்த வேள் கதையமுதம்' என்னும் நூலின் 197-201 ஆம் பக்கங்களில் இது தொடர்பாக உள்ள செய்திகள் அதில் உள்ளாங்கு அப்படியே வருமாறு:

"முருகப்பெருமான் தன்னுடைய தந்தையின் உத்தரலைப்பெற்றுக் கைலாசகிரிக்குப் பக்கத்திலுள்ள தன் ஆஸ்தான புரியாகிய கந்தகிரியிலிருந்து புறப்பட்டு வந்தான் இமாசலத்தில் கேதாரம் என்பது ஒரு தலம் அதை முருகன் தரிசித்து விட்டு மேலே போனான்.

வேங்கட மலை

பிறகு திருவேங்கட மலைக்கு வந்தான், வேங்கட மலை திருமாலுக்கும் முருகனுக்கும் உரிய இடம் என்று சொல்வார்கள். முருகன்தான் திருமால் ஆகிவிட்டான் என்று சொல்வதும் உண்டு. வட நாட்டில் உள்ளவர்கள் வேங்கடத்தில் உள்ள பெருமாளைப் பாலாஜி என்று கூறுவர். பாலன் என்பது முருகனுக்குப் பெயர் ஜி என்பது மரியாதையைக் குறிக்கும் விகுதி. வடநாட்டில் உள்ளவர் களுக்குச் சைவ வைணவ வேறுபாடு தெரியாது. அவர்கள் பாலாஜி என்று சொல்வதனால் அங்கே முருகள் எழுந்த குளியிருந்தான் எனற குறிப்புக் கிடைக்கிறது. திருவேங்கடத்தில் உள்ள சுவாமி கையில் சக்கரத்தையும்

இல–3