பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செடிகள் என்று வளர்த்தார். தோட்டம் போடுவதில் அலாதியான விருப்பம் உண்டு அப்பாவுக்கு. சுண்டைக்காய் செடியொன்று இருந்தது. தினசரி சுண்டைக்காய்க் குழம்பு, கூட்டு என்று மணக்கும். அப்பா அசைவ உணவுப் பிரியர். ஆனால் தினமும் கட்டு படியாகாது. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை எல்லாக் குழந்தை களுக்கும் கறிக் குழம்பு கிடைக்கும். அப்பாவுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி நீலாவதி மூன்றாண்டுகளே வாழ்ந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அடுத்து சரஸ்வதி. இவருக்கு ஆறு குழந்தைகள். ஆக, நாங்கள் ஐந்து பிள்ளைகள், மூன்று பெண்கள். எல்லாருக்கும் 'விந்தன்' சாரின் குழந்தைகள் என்கிற பெருமையால் சிரமமில்லாமல் நல்ல வேலைகள் கிடைத்தது ஒரு பெரும் பேறு. புளியந்தோப்புப் பகுதியில் அப்பா இருந்தபோது, தி.மு.க. வின் என்.வி. நடராசன் நல்ல நண்பர். எங்கள் பக்கத்து வீட்டில் அறிஞர் அண்ணாவின் நண்பர் பேராசிரியர் மா.கி. தசரதன் இருந்தார். அப்பா பொதுவுடைமை சித்தாந்தங்களில் பற்றுடைய வராக இருந்தார். தி.மு.கழகம் தொடங்கிய காலத்தில் அப்பா வைக் கட்சியில் சேரும்படி அழைத்ததுண்டு. ஆனால், அப்பா கடைசி வரை எந்த அரசியல் கட்சியோடும் தம்மை இணைத்துக் கொண்டதில்லை. கட்டுப்பாடுகள் அற்ற சுதந்தரமான சிந்தனை களே அவருடைய தனித்தன்மையாக இருந்தது. உலகத் தமிழ் மாநாடு முதன்முறையாக அண்ணாவின் காலத்தில் சென்னையில் நடைபெற்றபோது, சில எழுத்தாளர் களுக்கு நகர்ப் பகுதியில் இலவச வீட்டுமனை வழங்க முன்வந்தது அரசு. மா.கி. தசரதன் பரிந்துரையில் அப்பாவுக்கும் மனை தருவதாக அண்ணாவே அழைத்துச் சொன்னார். ‘'வேண்டாம்' என்று சொல்லி அதைக் கூடப் பெற்றுக் கொள்ள மறுத்த புதிர் மனிதர் அப்பா. அப்பாவுக்குப் பண்டிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக கண்ணன் பிறந்த நாள், தீபாவளிக்கு மறுநாள் வரும் கேதார கெளரி விரதம் போன்றவை. ஆனால், கோயிலுக்குப் போய் வழிபடுகிற வழக்கம் கிடையாது. கண்ணன் பிறப்பு நாளன்று வீடே அமர்க்களப்படும். கண்ணன் படத்துக்கு அப்பாவே மலர் மாலைகள் போட்டு அலங்காரம் 10 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2ΟΟ5