பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, செம்மொழி எனப்படுவது முறையான இலக்கண வரையறை கொண்டிருப்பதாகும். தமிழில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல், தமிழ் எழுத்துக்கும், சொல்லுக்கும். மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் வகுத்த நூலாகும். வாழ்வை அகம், புறம் எனப் பகுத்து அதற்கு இலக்கணம் சமைத்த பெருமை தமிழுக்கே உண்டு. எழுத்தும், சொல்லும், பொருளும் அவற்றினூடே பாவும், மரபும் இலக்கணம் பெற்றுள்ளமை தொல்காப்பியச் சிறப்பாகும். பின்னர் தோன்றிய நன்னூல் முதலாய பல நூல்கள் தமிழின் இலக்கண வரம்பு, கட்டுக்கோப்பு, வரையறைக்குச் சான்று பகர்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைந்த இலக்கண நெறிகளிலே சிதைவின்றி இன்றைக்கும் போற்றப்பட்டு வரும் சிறப்பு தமிழ் மொழிக்கே உள்ளது. பழைமைக்குப் பழைமையாயினும், புதுமைக்கும் இடம் கொடுத்து, 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே' என்று ஏற்றுக் கொண்டு மாற்றங்களைக் கண்டு வளம் பெற்று வரும் மொழி, தமிழ்மொழி. - ஆகத் தமிழ், உயர்மொழியாகவும், தனி மொழியாகவும், செம்மொழியாகவும் அமைந்துள்ள சிறந்த மொழி என அறிந்தோம். இன்றைக்கும் தமிழ் எழில், வளம், இளமை குன்றாது உயிர்ப்புடன் இயங்குகிறது. சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கற்ற மொழி. இலத்தீன், பாரசீகம் ஆகியனவும் ஏறத்தாழ முன்னதைப் போன்றனவே. இவை செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ள நிலையில்தான், தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நூறாண்டுகளுக்கு முன்னரே எழுந்தது. சம்ஸ்கிருத மொழிக்கு வழங்கப்படுவதுபோல் பெரும் அளவில் மானியங்கள், நிதியளிப்பு எல்லாம் தமிழுக்கும் வேண்டும். அதன் வழி, உலகப் பல்கலைக் கழகங்களில் எல்லாம்-தமிழ் இருக்கை - தமிழ்த் துறை ஏற்பட வேண்டும். தமிழ் ஆராய்ச்சி வளர்ந்திட வேண்டும். தமிழில் புது நூல்கள் - அறிவியல் பொருளியல் பிற துறை நூல்கள் எல்லாம் பெருகிட வேண்டும் என்ற விழுமிய நோக்கத்துடன்தான் இக் கோரிக்கை எழுந்தது. இத்துணைக் காலம் போராடி இப்போது 40 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005