பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கை போன்ற நாடுகளில் ரப்பர் மரங்கள் மிகுதியாகப் பயிரிடப்பட்டு, ரப்பர் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ரப்பர் பயிராகிறது. - இந்த நாடுகளில் நூற்றுக்கணக்கான ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் பால் சேகரிக்கப்பட்டு, அத்துடன் அசிடிக் அமிலம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அப்போது ரப்பர் பாலின் ஒரு பகுதி கட்டியாகி, மீதிப் பகுதி நீராகப் பிரிந்து விடும். -- திட ரப்பர் இயந்திர உருளைகளின் ஊடே செலுத்தி அழுத்தப் பட்டு, நீர் பிழியப்பட்டு அகற்றப்படும். இந்த தகடு வடிவில் கிடைக்கும் ரப்பரைத் தொங்கவிட்டு, புகை மூட்டப்படும். இப்போது நீர் முற்றிலுமாக நீக்கப்பட்டு புகைந்த ரப்பர் பெறப்படும். இந்த கச்சாரப்பர் மீள்சக்தி உடையதாக இருக்கும். ஆனால் வெப்பநிலை மாறுபாடுகளைத் தாங்கும் சக்தியற்றதாக இருக்கும். கோடை காலத்தில் இளகி, பிசுபிசுப்பாக ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையதாகவும், குளிர்காலத்தில் இறுகி, வெடிப்புகள் ஏற்பட்டு நொறுங்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். எனவே, இதை அப்படியே பயன்படுத்த இயலாது. பல்வகை வேதிப் பொருள்களை இத்துடன் தகுந்த அளவுகளில் சேர்த்து, இதன் பண்புகள் மேம்படுத்தப்படும். இந்நிகழ்ச்சி கூட்டுதல்: (காம்பவுண்டிங்) எனப்படும். . . கூட்டுதலின்போது கச்சா ரப்பருடன் கந்தகம் சேர்க்கப்பட்டு வெப்பப்படுத்தப்படும். 'வல்கன் எனும் கிரேக்க, வெப்பக் வையத்துள் வாழ்வர்ங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (50) உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்தன்மையன் ஆவான். - - e & - - ருராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 ல 57