பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த சரித்திர உண்மை, நாம் அனைவரும் அறிந்ததே ஆனால், இதே கொலம்பஸ்தான் ரப்பரையும் முதன்முதலாக ஐரோப்பிய - ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்தார் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன் இரண்டாவது அமெரிக்க யாத்திரையின்போது கொலம் பஸ், தென் அமெரிக்கப் பழங்குடிகள் ஒரு மரத்தின் பிசினை உருண்டையாக்கி, அதைத் தரையில் அடித்துத் துள்ளி எழச் செய்து, அதை வைத்து விளையாடியதைக் கண்டு அதிசயித்தார். பந்து என்பதே கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், துள்ளிக் குதித்த அந்தப் பொருள் அவருக்கு மிக்க வியப்பை அளித்தது. மேலும் இப்பொருள் மீள் சக்தி (எலாஸ்டிசிட்டி) உடையதாக இருந்தது எனவும் கண்டு, அந்த மரத்தின் கன்றுகளை எடுத்துச் சென்று மற்ற நாடுகளில் பயிரிடவும் ஏற்பாடு செய்தார். இம்மரத்தின் பிசினை பென்சில் எழுத்துகளின்மீது தேய்த்த போது அந்த எழுத்துகளை அது அழித்தது. ஆங்கிலத்தில் ரப்' என்பது அழுத்தித் தேய்ப்பதைக் குறிப்பது. இப்படி அழுத்தித் தேய்த்தபோது பென்சில் எழுத்துகளை அது மறையச் செய்ததால் அப்பொருள் ரப்பர் என அழைக்கப்படலாயிற்று. இன்றும் கூட ஒவியர்கள், பள்ளி மாணவர்களால் எரேஸர் என்னும் பெயரில் அழிப்பானாக ரப்பர் பயன்படுத்தப்படுகிறது. கொலம்பஸின் கண்டுபிடிப்புக்குப் பின் சுமார் முந்நூறு ஆண்டுகள் கழிந்த பின்பே ரப்பர் பல வகையில் உபயோகத்துக்கு வந்தது. இயற்கை ரப்பர் 'ஹெவியா பிரேசிலியென்ஸிஸ் எனும் பெயர் கொண்ட மரத்தின் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 'ஹெவியா என்றால் 'கண்ணிர் விடும் மரம் என்பது பொருள். இம்மரத்தின் பட்டையை கூர்மையான ஓர் ஆயுதத்தால் கீறினால் அதிலிருந்து சொட்டுச் சொட்டாக வெண்மை நிறத்தில் இப்பிசின் கசியும். இப்பிசின், ரப்பர் பால் எனப்படும். இதில் 30 முதல் 40 விழுக்காடுகள் திட ரப்பர் துளிகளும் மீதி பாகம் தண்ணிரும் இருக்கும். ரப்பர் மரங்கள் ஈரமும் வெப்பமும் மிகுந்த பிரதேசங்களில் நன்கு வளரும். தென் அமெரிக்காவில் அமேஸான், ஆரினாக்கோ ஆறுகளின் பள்ளத்தாக்குகள், மெக்ஸிகோ, பர்மா, மலேசியா, 56 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005