பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கித் தருகிறேன்; இந்த முறை உனக்கு அதிர்ஷ்டமில்லை என்று கூறினார். என் மனத்தில் அந்தப் பொன் மொழிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தின. நான் செருப்பின் மீதிருந்த ஆசையை விட்டு விட்டேன். வெயில், மழை எதுவாயினும் என் பாதங்கள் மிதியடியைத் தழுவவில்லை. Tென்னைப் பார்த்து, கணக்காளர் பெயர் கேட்டார், படிப்பு பற்றி விசாரித்தார். உயர்நிலைப் பள்ளியில் விருப்பப்பாடமாக 'புக் கீப்பிங்' எடுத்திருந்தேன். அது இன்றைய பி.காம் படிப்புக்குச் சமம். 'டபுள் என்ட்ரி என்றால் என்ன தெரியுமா?’ என்று கேட்டார். டெபிட் கிரடிட் அஸெட்ஸ், லையாபலிட்டிஸ், ப்ரீபெய்ட் எக்ஸ்பென் ஸ்ஸ் பற்றிக் கேட்டார். வியாபாரக் கணக்குப் பாடத்தின் அடிப்படை யான மூன்று மந்திரங்களை வினவினார். பளிச்சென்று பதில் சொன்னேன். பிறகு என் குடும்ப நிலையைப் பற்றி விசாரித்தார். 'ஏன் தாம்பரத்தில் இருந்து விண்ணப்பத்தை அனுப்பினாய்?' என்று கேட்டார். மிகச் சாதுர்யமான கேள்வி. அவர் கேள்வியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன். - "தாம்பரத்தில் வசிக்கிறேன். அதனால் அங்கிருந்து அனுப்பி னேன்.' - - "அலுவலகத்துக்குக் காலை எட்டரை மணிக்கு வந்தாக வேண்டும். தாம்பரம் என்றால் காலை ஆறு மணிக்கே புறப்பட வேண்டுமே?” எனறாா. "என்னால் முடியும் ஐயா. இந்த வேலை கிடைத்து சம்பளம் வாங்கித்தான் வருகிற மாதம் என் குடும்பத்தை நடத்த வேண்டும். என் தாயைக் காப்பாற்ற வேண்டும்' என்றேன். அவர் சிரித்தார். 'பொதுவாக வெளியூரிலிருந்து வரும் விண்ணப்பங்களைக் கவனிப்பதில்லை. ஆனால், நீ சைதாப்பேட்டையி லிருந்து விண்ணப்பம் அனுப்பியது நினைவுக்கு வந்தது' என்றார், என்னை ஆராய்வது போல பார்த்து. நான் வியப்புற்றேன். 'எப்படிக் கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டு, முன்பு நான் அனுப்பி தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் கையிலெடுத்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். 66 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005