பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகி இராம சடகோபன், ம.பொ.சி. தலைமையில் 'அஹிம்சா சமதர்ம, சோஷலிஸ்க் குடியரசு கட்சி என்ற சேராவுடன் இணைந்து (இன்று குமாரவாடி இராமானுஜாச்சர்ய சுவாமிகள்) அமைப்பை திருவல்லிக்கேணியில் தொடங்கினேன். (இது பற்றி சிலம்புச் செல்வர் பற்றிய நினைவுகள் எழுதும் போது குறிப்பிடுகிறேன்). அதனால் என் இலக்கியத் தாகத்திற்கு ஸ்பென்ஸர் ஒத்துழைப்பு தராது என்று முடிவு செய்து ஒரே நாளில் விலகி வெள்ளி மணி'யில் சேர்ந்தேன். (என் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று வெள்ளைக் காரத் துரை சுணங்காமல் கூறிவிட்டார். பிராவிடண்ட் பண்டில் பிடித்த தொகை எட்டு ரூபாய் சொச்சம். அதையும் தருவதற்குத் தடை விதித்தார். பிறகு மணியார்டர் மூலம் எனக்கு அனுப்பப்பட்டது). ஸ்பென்ஸருக்குப் பிறகு, வெள்ளி மணி. இந்த அனுபவத்தை முன்பே எழுதி விட்டேன். 1948இல் அமுதசுரபி அலுவலகம் Tெந்த அலுவலகத்தில் 52 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி னேனோ, எந்த அலுவலத்தில் ஆசிரியராக அமர்ந்தேனோ, எந்த அலுவலகத்தைச் சொந்தமாக விலைக்கு வாங்கி நடத்தினேனோ, எந்த அலுவலகத்தின் உயர்வுக்கு உடல், பொருள், (உயிர்த் தியாகமில்லை) தியாகம் செய்து சிறந்த இலக்கியப் பத்திரிகையாக உயர்த்தினேனோ, எந்த அலுவலகத்திலிருந்து அவமானம் ஏற்படுவதனின்று தப்பி. எந்தவித வழியனுப்பு பாராட்டும் நன்றியும் இல்லாமல் 2002 ஜூலையில் வெளி வந்தேனோ... அந்த 'அமுதசுரபி' அலுவலகத்திற்கு 1948ஆம் ஆண்டு செப்டம்பர் காலை பத்து மணிக்குச் சென்றேன். மாலை ஐந்து மணிக்கு மேல் துண்டை மடித்துப் போட்டுக் கொண்டு 'இந்த அலுவலகத்தில் சேரப் போவதில்லை என்ற உறுதியுடன் வெளியே வந்தேன். - என்னை புன்முறுவலுடன்நியமித்ததிரு.டி.கே.சாமி அவர்களுக்கு 'நான் ஏன் அமுதசுரபியில் தொடர விரும்பவில்லை?" என்ற காரணங்களை 4 பக்கங்கள் எழுதி தபாலில் அனுப்பி விட்டு, மீண்டும் சின்ன அண்ணாமலை எதிரே போய் நின்றேன். மறுநாள் வித்வானும், நண்பர் ஸுபாவும் எரிமலை போல் கோபத்தைக் க்க்கினர். - நான்கு மாதங்களுக்குப் பிறகு நான் மீண்டும் 'அமுதசுரபி'யில் சேர்ந்த சம்பவங்களை இப்போது மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். அதை... பிறகு சொல்கிறேன்... 68 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005