பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

எஜமானரால் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டவர். பின் முஸ்லிமானதால் பெருந்தொகை கொடுக்கப்பட்டு விடுதலையானவர். அண்ணலாரைப் பின்பற்றி மதினா மாநகர் சென்றவர்.

மதினாவில் முதன் முதலாகப் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டவுடன் தொழுகை அழைப்பான 'அதான்' எனும் பாங்கொலி எழுப்ப ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலரும் அப்பணியைச் செய்ய விரும்பினர். ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அப்பணியை நிறைவேற்றும் முழுத் தகுதிப்பாடுடையவர் பிலால் (நலி) அவர்களே எனத் தேர்வு செய்து அப்பணியை அவரிடத்திலே ஒப்படைத்தார். இயல்பாகவே இனிய குரல் வளம் படைத்த பிலால் (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்வோடு அப்பணியை நிறைவேற்றி மகிழ்வித்தார். மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படக் கூடிய கறுப்பராக அடிமையாக இருந்த ஒருவருக்கு உன்னதமான தொழுகை அழைப்புப் பணியைத் தந்து பெருமைப்படுத்தியதோடு, பிலால் (ரலி) அவர்களை 'செய்யதினா' என்ற அடைமொழியோடு அழைத்துச் சிறப்பளித்தார் பெருமானார் (சல்) அவர்கள். 'செய்யதினா' என்பதற்கு ‘என் தலைவரே' என்பது பொருள். அறுவறுப்பான தோற்றமுடைய, அடிமையாக இருந்த ஒருவரை இறைவனின் இறுதித் தூதராக, அவனிக்கோர் அருட் கொடையாக வந்துதித்த பெருமானார் (சல்) அவர்கள் 'என் தலைவரே' என அடை மொழியிட்டு மதிப்போடும் மரியாதையோடும் அழைத்துப் பெருமைப்படுத்தினார் என்றால் மனித நேயத்துக்கு இதைவிட சிறந்த எடுத்துக் காட்டை வரலாற்றில் காணமுடியுமா?

இச் செயலின் உன்னதத்தை, அதன் விளைவை அறிந்துணரும் வாய்ப்பு நான் 1986ஆம் ஆண்டு இரண்டாவது, முறையாக அமெரிக்கா சென்றிருந்தபோது கிட்டியது.