பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


2. எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பு என்கிற, முறையில், (பள்ளி) மாணவர்கள் அனைவரும், அதிக எண்ணிக்கையில் போட்டியில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

3. தலைமையேற்றுப் பிறரை வழி நடத்தவும், தலைமை வகிப்பவர்களின் வழி நடந்து பின்பற்றிச் செல்ல வும் கூடிய பேராண்மை குணங்களை வளர்த்துவிட.போட்டி கள் உதவுகின்றன.

4. மகிழ்ச்சி, கேளிக்கை, சந்தோஷம், திருப்தியில் மாணவர்கள் திளைக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, போட்டிகளை நடத்துகின்ற அனுபவங்கள் தருவது, பாடத் திட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது.

போட்டிகளை நடத்துவது, போட்டிகளில் அதிகாரி نجینه (தளாகப் பணியாற்றுவது, போன்ற காரியங்களில் நல்ல அனுபவங்களைத் தந்து, ஆற்றலை வளர்த்துத்தரவும் உள்ள கப் போட்டிகள் உதவுகின்றன.

உள்ளகப் போட்டிகளை கடத்தும் முறைகள்

உள்ளகப் போட்டிகளை நடத்துவதற்கு முன்பாக, ழ்ேக்காணும் குறிப்புகளைக் கண்டறிந்து, கடைபிடிப்பதுதல்லது.