பக்கம்:உதயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உதயம்

தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்

மாற்றர் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் 

ஆற்றது வந்துன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.             21

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துகின் பள்ளிக்கட் டிற்கீழே 

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே 

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் 

அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல்நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.               22

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் 

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணுஉன்

கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய 

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்க் தருளேலோ ரெம்பாவாய்.                    23

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்ருய் திறல்போற்றி 

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி 

குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி 

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயரம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.              24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/32&oldid=1201835" இலிருந்து மீள்விக்கப்பட்டது