பக்கம்:உத்தரகாண்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    107


“நீ போய்ப் பேசிக்கொண்டிரு தாயம்மா, உறவுகள் விட்டுப் போகக்கூடாது. அரசியல் வேற, இது வேற. போம்மா...” என்று அம்மா வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை. அவளே காபி தயாரித்துக் கொண்டு சென்றாள்.

பழத்தட்டுகளும் பூவிதழ்களும் ஒரு புதிய துவக்கத்துக்குக் கட்டியம் கூறினாற்போல் இருந்தது.

படத்துக்கான இலவச பாஸை அய்யா அம்மாவிடம் கொடுத்தார்.

“ராதா இருந்தால் போய்ப் பார்க்கலாம். அவளுக்குத் தான் மோகன் எழுதியதுன்னா, கொண்டாட்டமாகப் போகலாம்பா...” என்றார் அம்மா.

‘ஏன், நீயும் தாயம்மாவும் போய்ப் பார்த்துவிட்டு வாங்களேன்?”

“அய்யா, எனக்கொண்ணும் அதைப்பார்க்க வேண்டாம்!” என்றாள் அவள் நெஞ்சடைக்க. சினிமாவுக்கு அய்யா சென்ற நினைவே இல்லை. அம்மாவும் ராதா அம்மாவும் சென்றிருக்கிறார்கள். பத்மினி சிவாஜி நடித்த இராமாயணம் போனார்கள். அவளுக்குத் துவக்க முதலே சினிமாவில் ஈடுபாடு இல்லை. காங்கிரஸ் பொருட்காட்சி நடக்கும். அங்கே சென்றிருக்கிறார்கள். பஞ்சமியும் சந்திரியும் ராதாம்மாவும், மருதமுத்து, எல்லோருடனும் போயிருக்கிறார்கள். அங்கே காதிக்கடையில பராங்குசமும் சுப்பய்யாவும் மாறிமாறி வந்தவர்களிடம் உள்நாட்டுக் கைத்தொழில் பிரசாரம் செய்வார்கள். அய்யா மிகத் தீவிரமாக ஈடுபட்ட காலம். அங்கே நாடகம் நடக்கும். நவாப் இராஜ மாணிக்கத்தினை... ராமதாஸ் நாடகம் பார்த்திருக்கிறாள். எல்லாரும் சிறுபிள்ளைகள். நாடகம் முடிய ஒன்பது மணி ஆகும். கூட்டத்தோடு நடந்தே குருகுலம் வந்துவிடுவார்கள்... அங்கே அவர்கள் இருந்தபோது தான் அவ்வையார் படம் வந்தது. சுந்தராம்பாள் அம்மாள் குருகுல வித்யாலயா நிகழ்ச்சியில் வந்து பாடியிருக்கிறார்கள். வெள்ளைச் சேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/109&oldid=1049634" இலிருந்து மீள்விக்கப்பட்டது