பக்கம்:உத்தரகாண்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116   ✲   உத்தரகாண்டம்

முடியாம படுத்துகிறாரு எதுக்க மீட்டிங் போட்டிருந்திச்சி. எம்.ஜி.ஆர். ஆச்சி வந்த பெறகு இது எதர்க்கச்சி. ஆனாலும் தலவர் புரவலரையா, அந்த ஆச்சில அமைச்சரு... பெரீம்மா, நீங்க வந்து சொன்னீங்க, “இந்தாப்பா, அய்யா, தூக்கமில்லாம அவுதிப்படுறாரு. மைக்க நிறுத்திடுவீங்களான்னு. பத்து மணிக்கு மின்னயே கூட்டம் முடிச்சிட்டம்...”

“ஆமாமாம். நினப்பிருக்கப்பா. உங்கள மண்ணாங்கட்டின்னு கூப்புட மாட்டாங்க, ஒரு பேரு வச்சாங்க...”

“ஆமாம்மா, கொழந்தவேலுன்னு வச்சாங்க. அத சொல்லியே கூப்டுவாங்க... ஆனா இப்ப நீங்க ஆரும்கூட அப்படிக் கூப்புடறதில்ல. எங்காயி வச்ச மண்ணாங்கட்டிதா நெலச்சிருக்கு” என்று சிரிக்கிறான்.

“சரிங்க கொழந்தவேலு, பொண்ணுக்கு நர்சு படிக்க அம்பதாயிரம் குடுத்தா எடம் வாங்கினீங்க?”

“வுடுவனா? நேர, புரவலர் அய்யா வூட்டுக்குப் போன... போல்சு, துப்பாக்கி, காவலு எல்லாம் மறிச்சாங்க. ‘போயி சொல்லுங்க. நா. ஆதிநா கச்சிக்காரன். அவங்கம்மா இருக்கற ஊருக்காரன். மண்ணாங்கட்டி பாக்கணும்னு வந்துகிறான்னு சொல்லுங்க’ன்னே. ஒடனே ஆளுவந்திச்சி... உள்ளாற கூப்புடறாருன்னு. “இன்னாயா, எப்டீகிற"ன்னாரு. நா சொன்ன. த பாருங்கய்யா, நா தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட சாதி. அங்கபோனா, எம் பொண்ணுக்கு நர்ஸ் படிக்க அப்ளிகேசன் போட்டு, லெட்டர் வந்துகிது. எடுத்திட்டுப் போனா, அம்பதாயிரம் கட்டணும்ங்கிறாங்க. இன்னா நாயம்?ன்ன. அவுரு கையக்காட்டி அமுத்தினாரு. ஒடன போன் போட்டு ஆரிட்டயோ பேசினாரு. ஒரு லட்டர் டைப் செய்து குடுக்க சொன்னாரு. கொண்டாந்து குடுத்தே. சீட்டுக் கெடச்சி, படிச்சி முடிச்சி, இப்ப வீனஸ் ஆசுபத்திரிலதா நர்சாகீது. வாரம் ஒருநா தா ஆஃபு. அப்ப வூட்ட இருக்கும்...”

“பெரிய பெரிய மணிசருங்க, மினிஸ்டருங்க வந்து வைத்தியம் பாத்துக்கிற ஆஸ்பத்திரியாச்சே அதுவா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/118&oldid=1049654" இலிருந்து மீள்விக்கப்பட்டது