பக்கம்:உத்தரகாண்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    117


“ஆமாம்மா. புரவலர் அய்யா கூட செக்கப்புக்குப் போவாராம். அவங்க சம்சாரத்துக்குக்கூட மூணு மாசம் மின்ன ஆபரேசன்னு சொல்லிச்சி...”

“அப்ப உங்க பொண்ணு, பத்தாயிரத்துக்கு மேல சம்பாரிக்கும்...” மண்ணாங்கட்டியின் முகத்தில் அந்த சந்தோசத்தின் பூரிப்பில் நிழல் படிகிறது. அவள் துணுக்குற்றுப் பார்க்கிறாள்.

“கவுர்மென்டு ஆசுபத்திரியன்னா சம்பளம் அதிகம் கெடைக்குமா? பிறகு லீவு அது இதுண்ணு குடுக்குமா. இங்கே நாலாயிரந்தா குடுக்கிறாங்க...”

“ஏம்பா, சீட்டு வாங்கினாப்பல, ஆதிதிராவிடர்னு, வேலையும் வாங்க வேண்டியதுதான?”

“ஆமாம் பெரிம்மா. அது முன்னமே அப்ளிகேசன் போட்டிச்சி. இப்பதா, போன மாசம் வேலைக்கு வந்திச்சி. லட்டர எடுத்திட்டு ஆசுபத்திரிக்குப் போன. அமைச்சருட்ல கூட உள்ளாற பூந்துற முடிஞ்சிச்சி. இங்கே போக முடியல. ஒரே காரா வருது. யார் யாரோ கதவத் தொறந்து உடுறாங்க. போறாங்க. நா கெஞ்சுன. ப்பா, தமிழ் செல்வின்னு, நர்சாகீது. எம் பொண்ணு. முக்கியமான லட்டர் குடுக்கணும் பேசணும்னு கெஞ்சுன. பத்துமணிக்கு காலேல போன. வாசல்லியே நின்னுக்கிட்டிருந்தே. அது பன்னண்டுமணிக்கு வராந்தால அந்தக் கடுதாசியையும் எடுத்திட்டு வந்திச்சி. மூஞ்சி, காலு கையெல்லாம் தொப்பி போட்டுட்டு...” என்று சொல்லும் போதே பெருமை பொங்க சிரிப்பு வழிகிறது. “நீ ஏம்பா இங்கெல்லாம் வந்தீங்க? பெரிய ஆபீசருங்க, தலைவர்கள்ளாம் வர எடம், இங்க வந்து ஏன் பேரைக் கெடுக்கிறீங்க? நாவூட்டுக்கு வருவேன்ல! அப்ப பாக்குறது. இப்ப வூட்டுக்குப் போங்க"ன்னு சொல்லிடிச்சி...”

அவன் சிரித்தாலும் அவனுடைய துக்கம் கண்களில் உருகி வழிகிறது. துடைத்துக் கொள்கிறான்.

“ ‘கவுர்மென்ட் வேலை எல்லாம் வாணாம்பா. இங்க சென்டிரல் மினிஸ்டர் எம்.பி. பெரிய பெரிய ஆளுக, நடிகருங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/119&oldid=1049655" இலிருந்து மீள்விக்கப்பட்டது