பக்கம்:உத்தரகாண்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122   ✲   உத்தரகாண்டம்


“ஏம்மா, அந்த வாசல் டாக்டர் எப்பிடி வயசான வந்தா...”

“ஐயம்மா, அவுரு ரெம்ப நல்ல மனிசரு. அவருக்கு வயசா-தொண்ணுறாகப் போவுது. செத்துப் போன சம்சாரம் நினைவாத்தான் தரும வைத்தியமே பண்ணுறாரு. அவுருக்குன்னு ஒரு சைகிள் ரிச்சா, அதுலதா வருவாரு போவாரு. அவுருதா சொல்லப்போனா, காபந்து.”

“ஆமா, நானும் பாத்திருக்கிற... வெளுப்பா வேட்டி சட்டை போட்டுட்டு மூக்குக் கண்ணாடி போட்டுட்டு வருவாரு. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஏழை எளிசெல்லாம் வந்த பெறகுதா அவுரு உங்க வீட்டு ரூம்புல வச்சிட்டாருன்னு தெரியும்...”

“ஆச்சிம்மா... எனக்கு, அந்த ஸ்கூல்ல ஒரு தடியன் இருக்கிறான். மோசமான ஆளு. அவன் சங்கரியக் கூப்புட்டுவுட்டு, “ஏம்மா, இந்தப் புள்ளிங்கள வச்சிட்டு லோலுப்படுற. கான்டீன்ல லஞ்ச்பாக்கெட் போடற உத்தேசம் இருக்கு ஒரு லெமன் பாத், இல்லாட்டி விஜிடபிள் தக்காளி பாத், காலம பத்துமணிக்கு வந்தா ஒரு மணியோட வேலை குளோஸ். இப்படி ஆறுமாசமம் மூணு மாசமுமான புள்ளங்க. அழுகைய மாத்தி, மூத்தரம் பீ எடுத்து, நோவு நொடிபாத்து, உனக்கு என்ன கெடக்கிது? இதுல மாசம் ரெண்டாயிரம் வரும். காபி சாப்பாடு கழிஞ்சு போகும்’ன்னானாம்.” டாக்டர்ட்ட சொல்லிச்சாம.

“யாரு, அந்தப் பாவி, தாசனா ?”

“தாசனே வந்து கேப்பனா? அவனுக்கு எடுபிடிகள் இருக்கே? சீ? ஸ்கூலா? அங்கேயும் ரெண்டாயிரம் புள்ளங்க படிக்கிதுங்க. பணமா கறக்கிறான். ஹேமான்னு ஒரு பொண்ணு. அவகிட்ட ஏழப் பொண்ணு தானேன்னு பல்ல இளிச்சிருக்கிறான். அவ மேச்சாதி இல்ல. அதுங்க தா, போலி கவுராதி பாத்திட்டு விட்டுக் கொடுத்துப் பூசி மெழுகும். இவ நேர போலீசுக்குப் போயிட்டா. மாதர் சங்கம்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/124&oldid=1049661" இலிருந்து மீள்விக்கப்பட்டது