பக்கம்:உத்தரகாண்டம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    123

வந்தது. ஆனா, எங்கெங்கோ பணத்தக்கட்டி, வாயக்கரிசி போட்டு எந்தப் பேப்பரிலும் ஒரு சமாசாரமும் வராமப் பாத்துக்கிட்டான். பொம்பிளக, வயித்திலல்ல, நெஞ்சில நெருப்ப வச்சிட்டு வேல பாக்குறோம். என்னமோ படிச்சிட்டா, வேல பாத்துட்டா சொதந்தரம் வந்திரும்னாங்க. ஒரெழவும் இல்ல...”

இவளுக்கு ஒன்றும் பேசத் தெரியவில்லை.

“இப்ப, நமக்கு ஒரு துப்பும் கெடக்கல. இவதா ரயில் பாதையில விழுந்து தற்கொலை பண்ணிட்டாளா, இல்ல, எதானும் நடந்து பாதையில வீசிட்டாங்களா? அடிவயிறு சொறேல் சொறேல்னு இழுக்குது. நானும் ரெண்டு பொம்புள புள்ளங்கள வச்சிருக்கிறேன். ஒண்ணு இத நாலா வருசம் மெக்கானிகல் படிக்கிது. ரெண்டாவது, பிளஸ் ஒண்ணில நிக்கிது. எந்நேரமும் டி.வி. முடிய பாப் பண்ணிட்டு வந்திட்டா. நா காலேல ஏழர மணிக்கு வூட்டவிட்டா, பொழு தடஞ்சி வர. சனிக்கிழமை ஞாயித்துக்கிழம கூட லோலுதா... அங்கியும் எல்லாம் பொம்புளபுள்ளங்க. எச்.எம். நல்ல மாதிரி... ஸ்கூல நல்லா கொண்டாறனும், நல்ல பேரு வாங்கனும்ன... எல்லாம் பாவப்பட்ட வீட்டுப் புள்ளங்க. அதுங்களுக்கு ஒரு வழி காட்டுறோம்ங்கற திருப்திதா. இங்க வீட்டுல வந்தா இந்த மனிச, பொம்புள புள்ளயப் போயி சிகரெட் வாங்கிட்டு வரச்சொல்றாரு. அத்தப் புடிச்சித்திட்ன...

“யாரிடமேனும் சொல்லி அழவேணடும் என்று தோன்றும் ஆவேசம். ஆற்றாமை, யாரைக்குறை சொல்ல?...”

“படிக்கிறபுள்ளங்கள இந்த நாசகார டிவியே கெடுக்குது ஆச்சியம்மா? இந்தாளு, வி.ஆர்.எஸ். எதுக்கு வாங்கிட்டாரு?... ரெண்டு வளர்ந்த புள்ளகள வச்சிட்டு, வீட்டிலியே பாட்டில வாங்கி வச்சிட்டுக் குடிக்கிறாரு. இதுக்குதா அவுசிங் போர்டு வீட்டுக்குப் போனம். சீ...” கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/125&oldid=1049739" இலிருந்து மீள்விக்கப்பட்டது