பக்கம்:உத்தரகாண்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   143

பாக்க முடியல. கல்யாணம் திருப்பதில வச்சுக்கிட்டோம். ஜார்ஜூம் அவள் அம்மாவுந்தா வந்தாங்க...”

“அதுசரி, நீ தி.நகர்ல்ல இருந்தே? அங்கதான இருக்க?”

“இல்லிங்க ஆச்சி. இவங்கப்பா எட்டுவருசமா மஸ்கட்ல இருக்காங்க. நரேந்திரன் இப்பதா படிப்ப முடிச்சிட்டு யு.எஸ். போயிருக்கிறா. நா இப்ப நங்க நல்லூர் பக்கம் வந்திட்ட. எங்க மாமனாரு பெரிய பையன் எறந்தபிறகு ரொம்பப்படுத்திட்டாரு. பையன், பொண்ணு, எல்லாரும் யு.எஸ். போயிட்டாங்க. எங்க ஓரகத்தியாவும் ஸ்கூல் டீச்சரா இருந்தாங்களா, ரிடயர் ஆகி மகனோட போயிட்டாங்க. பிறகு தான் நாங்க இங்க வந்தோம்... நீங்க அதே பங்களாவுலதா ஒத்தைக்கு இருக்கீங்களா? ராதாம்மா, புருசன், மகன் யாருன்னாலும் வந்து பாக்குறாங்களா?”

“ஒரு நா வருவாங்கன்னு நினச்சிட்டிருக்கிறன்...”

“அப்ப... உங்களுக்கும் வயசாச்சில்ல, மகன் கூட போயிரலியா?”

“ஏம்மா, யாருக்கு வயசானா, யாருக்கு என்ன? நீயே இப்ப சொல்ற, புருசன், மகன் எல்லோரும் எங்கேயோ. யாருட்ட கேட்டாலும் தாய் நாட்டு மண்ணத் தட்டிட்டு ஓடுறதிலியே இருக்காங்க. இங்க எங்கவந்த சொல்லு...”

“அதா ஆச்சி, ஆடிக்கழிவுன்னு போட்டிருக்கா. தீவாளி வருது. துணி மணி வாங்கலான்னு வந்தேன். இவ புருசனும் சொன்னாப்புல யு.எஸ்.தா போறா. எல்லா ஏற்பாடும் ஆயிட்டது. முதத் தீவாளி. போகலான்னு சொன்னா. இன்னிக்கு இவளுக்கு லீவு. எங்க வீட்ல சனிக்கிழமதா துணி எடுப்போம்...”

“துணி எல்லாம் எடுத்தாச்சா?...”

“இத, காருக்குள்ள இருக்கு. வாங்களே ஆச்சி, அப்படியே நம்ம வீட்ல வந்து நாலுநாள் இருந்திட்டுப் போகலாம்? ஒத்தைக்குத்தானே இருக்கிறீங்க? எங்கூடவே கூட இருக்கலாம்... ஆனா, நீங்க மகன் கூப்பிட்டுக் கூடப் போகல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/145&oldid=1049982" இலிருந்து மீள்விக்கப்பட்டது