பக்கம்:உத்தரகாண்டம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168   ✲   உத்தரகாண்டம்

நினப்பில்ல, ஒரு பொம்புள பொம்மை, இடுப்பளவுக்கு வச்சி, ‘பாடிசைஸ்’ அளவெடுக்கறாப்புல... எனக்கு சரியாக் கூட நினப்பில்ல. அங்கெல்லாம் அந்நியத்துணி வாங்காதேன்னு சொல்லத்தான் போவோம். அந்த பொம்மயப் பாக்கவே கூச்சமாயிருந்திச்சி. இப்ப நினச்சிப் பாக்குறேன். இந்தப் பத்திரிகை, சினிமா, சுவரொட்டி எல்லாத்திலும், பொம்புளயத் துகிலுரியிற வேலயாத்தானிருக்கு. ஒரு துரோபதயத் துகிலுரிஞ்சான் துச்சாதனன். பாரத யுத்தம் வந்தது. இப்ப, ஒரு பத்திரிகைய, குடும்பத்திரிகையைப் பார்க்க முடியல. எல்லாம் வக்கிரமாயிருக்கு?” என்று அம்மா அலுத்துக் கொண்டார்.

“அம்மா, இதே நான் அங்க மதுரை வாசகர் வட்டத்துல சொன்னேன். பொம்பிளகதா, இந்த மாதிரி விஷயங்களப் பார்த்து எதிர்க்கணும். அது எங்க? நாலுபேர் சேருமுன்ன? பத்துபேர் பிரிக்க வராங்களே?”

“எனக்குக் கூடத் தோணும். இப்ப நம்ம தமிழ்ப் படங்களப் பாக்கிறேன் - பத்திரிகைகளும் படிக்கிறேன். ஆனா, இதிலென்ன தமிழ் கலாசாரம் புதிசா இருக்குன்னு புரியல. கையில் டிரிங்க்ஸ் வச்சிகிட்டு பேசுறதும், ஆணும் பெண்ணும் பார்ட்னர் சேர்ந்து ‘பால்’ டான்ஸ் ஆடினதும் கலாசார மோசம்னு சொன்னாங்க. ஆனா, வெள்ளைக்காரன் போயி, நம்மை நாமே என்ன கலாசாரத்த மீட்டுக் கிட்டிருக்கிறோம்?... நம் தமிழ்ப்படங்களில், வரும் காதலிகள், நாயகிகள், உடம்பைக் காட்டுறதில்தான் எல்லாம் இருக்கு. அதுவும் ஹீரோயின் கனவில் வரும் ‘காதல் காட்சிகள்...ஆகா’ இதான் கலாசாரம்! பாம்பேல, ஒரு மராத்தி சிநேகிதி நம்ம பத்திரிகை கதைகளில் வரும் படங்களப் பார்த்துட்டு, ‘உங்க மெட்ராசில பொண்ணுக ஸாரியே உடுக்கிறதில்லையா’ன்னு கேட்டா. ‘இல்லியே! எனக்குத் தெரிஞ்சி அப்படியில்ல. படம் ஒரு கவர்ச்சிக்காகப் போடுவ’ன்னு சொன்னேன்...” என்று ராதாம்மாவும் அதே கருத்தைச் சொன்னாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/170&oldid=1050019" இலிருந்து மீள்விக்கப்பட்டது