பக்கம்:உத்தரகாண்டம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   195



அய்யா, “இப்ப என்ன? பயமாயிருக்கா? என்ன பயம்? நடப்பது நடக்கட்டும், நாம் ஒரு சதியும் பண்ணல...” என்றார். பூடகமாகவே இருந்தது.

“யாருன்னு உங்களுக்கே தெரியலியா?” எந்த பதிலும் வரவில்லை.

“தாயம்மா, அவர் என்ன சாப்பிடுவார்னு தெரியல. கோதுமை வாங்கி வச்சிருக்கு. தட்டிப்புடைச்சிட்டு மிசினில கொண்டு போய் அரைச்சிட்டு வா!” என்றார் அம்மா.

“கேப்பை மா இருக்கில்ல? அதையே ரொட்டியோ, தோசையோ செய்யலாமே?” என்றார் அய்யா.

அப்போதெல்லாம், இப்போது போல் அரசியல் அன்றாட மனிதர் வாழ்க்கையில் மலினப்பட்டு இரைந்து கிடக்கவில்லை என்று தோன்றுகிறது. அவள் கோதுமை அரைத்து வந்தாள். சாமியாரும் அய்யாவும் இந்தியில் பேசிக் கொண்டார்கள். அம்மா ரொட்டி சப்ஜி செய்தார். சோறும் வடித்தார். நடையில் மெத்தைப்படி வளைவில் உள்ள அறை மிகப் பெரியது என்று சொல்லலாம். அங்கே ஒரு பெஞ்சு, அலமாரியில் புத்தகங்கள், கீழே உட்கார்ந்து எழுத படிக்க சாய்வு மேசை எல்லாம் உண்டு. சாமியார் பத்தரை மணிக்கே, ரொட்டியும் சப்ஜியும் சாப்பிட்டு விட்டு அந்த அறைக்குத் தூங்கப்போய்விட்டார்.

மாடிக்குச் செல்ல வெளிப்புறத்தில் ஒரு படி உண்டு. இப்போது அது இல்லை. அய்யா காலமாகு முன்பே, அது பத்திரமில்லை என்பது போல் தகர்த்து, வாசலைப் பூசிவிட்டார்கள்.

சாமியார், தூங்கினார், தூங்கினார், அப்பிடி! உள்ளே தாழ்போடவில்லை. அய்யாதான் பார்த்து விட்டுத் தூங்குவதை அறிந்து ஓசையின்றி வந்து கூடத்துப் பாயில் அமர்ந்தார்.

அந்த நேரத்தில் அநு பரபரப்பாக வந்தாள். அவள் வேலை ஒப்புக் கொண்டபின், இவர்கள் துயரப்பட்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/197&oldid=1050072" இலிருந்து மீள்விக்கப்பட்டது