பக்கம்:உத்தரகாண்டம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    257


அவள் குலுங்கும்போது இவளுக்கு ஏதோ புரிகிறது; புரியவுமில்லை.

“நீ என்னம்மா சொல்ற...”

“ஆமாம் தாயம்மா, இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை. என் குழந்தையை எடுத்திக்கிட்டு நான் போறேன். இனிமே நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம்... நீங்க என் புருசனும் இல்ல, என் குழந்தைக்கு அப்பாவும் இல்லன்னு கத்தினேன். தாயம்மா, உனக்கு மன்னிப்பே இல்லைன்னு போயிட்டாங்க... அவரை நான் மன்னிக்க மாட்டேன்னேன். அவரு நீ மன்னிக்க வேண்டாம், உனக்கும் மன்னிப்பில்லேன்னு...” குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

தோட்டக்கதவுத் தாழ் அகற்றும் ஒலி கேட்கிறது.

உள்ளே வருபவர்கள், சிங்கும் மனைவியும்...

“பிரணாம் மாதாஜி! ஞாபகம் இருக்குதா? நீங்க கோலம் போடச் சொல்லிக் குடுத்தீங்களே...?”

“அம்மா... தேவா அங்கே வந்திருந்தபோது வருவோமே?...”

அப்ப... அப்ப... அநும்மா... அந்த அவரு...

மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அரும்புப் பற்கள் தெரியச் சிரிக்கும் கோலம் தோன்றுகிறது.

“உங்களுக்கு, மக்க மனுசங்க?...”

“எல்லாம் இருக்காங்க...”

அதற்குமேல் அவள் கேட்கவில்லை. கேட்கவில்லை...

“அநுவுக்கும் புருசனுக்கும் சரியில்லை. அவங்க பிரிஞ்சிட்டாங்க...” சாமியார் சொன்ன சொல்...

“அப்பா, அவர் திடும்னு வந்துட்டார். எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியல. அனுப்பி வச்சேன்...”

உ.க.-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/259&oldid=1050286" இலிருந்து மீள்விக்கப்பட்டது