பக்கம்:உத்தரகாண்டம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258   ✲   உத்தரகாண்டம்


“அநும்மா, நிசாவின் அப்பா பேரு என்ன சொன்ன?...”

“கிரண்ணு வீட்ல சொல்லுவாங்க. சூர்ய கிரண் தேவ்னு பேரு. இவங்கல்லாம் தேவான்னு தான் கூப்பிடுவாங்க.”

“சிங்கு, ஏம்மா, உங்க பேரு தெரியல. நீங்கல்லாமும் எனக்கு எதுவும் சொல்லாம இருந்திட்டீங்களே?...”

“எங்களுக்கு எப்படித் தெரியும் மாதாஜி?... அவரே அங்கே வந்து தனியா இடம் பார்த்துக்கிட்டு வந்துதான் சொன்னது...”

“எல்லாம் என் பாவம்...”

“மாதாஜி, நீங்க இப்பவும் இங்கே இருக்கலாம். பக்கத்தில் வந்திருக்கிறீங்க. அநுபஹன் ரொம்ப ஒடிஞ்சி போயிட்டாங்க பாவம்... ரொம்ப... அவங்களுக்கு வந்த மாதிரி கஷ்டம் ஆருக்கும் வராது, வரக்கூடாது...”

நாங்க அந்தப் பக்கம் பைக்ல போவோம், நீங்க சில நாளைக்கு நிப்பீங்க.

“ரொம்ப நன்றி அய்யா. இந்த தேசத்துல, எல்லாம் கந்தலா குளறு படியா மனுச உறவே இல்லாம போகும் போது, நீங்கல்லா இருக்கீங்க. உங்க பய்ய ஓடிப் போயி கேக்கு வாங்கியாந்து வாயக்காட்டி வாங்கிட்டா. நல்லா இருக்கணும்... புது நாத்துங்க. நா இனி அடிக்கடி வருவே...”

“நாங்க வரோம் மாதாஜி.”

அவர்கள் மறுபடியும் வணங்கி விடைபெறுகிறார்கள்.

அவர்கள் சென்றபின், இறுக்கம் தளர்ந்து, மீண்டும் இறுக்கமாகும் உணர்வுகளில் நினைவுகளில் அவள் மிதக்கிறாள்.

“தாயம்மா, எங்கள்ள எந்த பூசை வழிபாடு செய்தாலும் ஒருவரி கடைசியில் வரும். தெரிந்தும், தெரியாமலும் அறிந்தோ அறியாமலோ நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் என்று கடவுளிடம் சரணடைவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/260&oldid=1050287" இலிருந்து மீள்விக்கப்பட்டது