பக்கம்:உத்தரகாண்டம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290   ✲   உத்தரகாண்டம்

தட்டுமுட்டுகள் அடங்கிய தாழ்வரை. சிறு மண் முற்றம். அதில் புல்லும் முள்ளும் வளர்ந்திருக்கின்றன. தலைமறையும் உயர்ந்த சுவர். அந்த எல்லைச்சுவரின் மீது கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

... அசுவினி சொன்ன சொற்கள் அந்தக் கண்ணாடிச் சில்லுகளில் நிழலாடுகின்றன. அபலைப் பெண்களின் குரல்களை அவை வெளியே விடாமல் வாங்கிக் கொண்டிருக்கும்.


“இன்னாம்மா, கதவத் துறந்திட்டுக் குச்சி போவலாமான்னு பாக்குறியா?”

தூக்கிவாரிப் போட்டாற்போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கன்னிம்மாதான். அகலப்பொட்டு. பளீரென்று சிரிப்பு. கழுத்தில் பருமனான தாலிச்சரடு...

“ஒண்ணுமில்லம்மா, சும்மா உக்காந்தே பழக்கமில்லையா, கதவு இருக்கேன்னு துறந்து பாத்தே...”

“வாங்க, சுடசுட பொங்கல் கொணாந்திருக்கிறேன்...” அவள் திரும்பி வருகிறாள். தட்டில் பொங்கல், சட்னி... இப்படி ஒரு காலம்... சாப்பிடுமுன், “நீ ஒருவாய் சாப்பிடு கன்னிம்மா?”

“ஐய்யே, நான்லாம் இப்ப சாப்புடமாட்டே...”

“ஏன்...? நீ ஒருவாய் சாப்புட்டாத்தா நான் எடுப்பேன். நானே குடுக்கிறேன்... வாயத் தொற?”

அவள் சிரிப்பும் சந்தோசமுமாக மறுக்கிறாள்... “அட இன்னா நீ... யார்னாலும் பாத்தாங்கன்னு வச்சிக்க, என்னியக் கழுத்தப்புடிச்சி வெளிலே தள்ளி போலீசுக்கும் குடுத்திருவாங்க. வாசல்லியே போல்சு உக்காந்திருக்கு தெரியுமில்ல?”

“இல்ல கன்னியம்மா, தெரியாமதா கேக்குற, போலீசில புடிச்சிக் குடுக்கிற அளவுக்கு நீ என்ன குத்தம் செஞ்சே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/292&oldid=1050373" இலிருந்து மீள்விக்கப்பட்டது