பக்கம்:உத்தரகாண்டம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    319

பிடிபட்டுப் போனவங்க, உள்ள. கோர்ட்டு கேசு இருக்கு. ஆனா, இவங்க?...”

அப்போது அங்கே, வயதானவர் ஒருவர், வாயிலில் நிற்கிறார்.

“என்ன, தாயம்மா? நினப்பு இருக்கா?...”

“ஐயா சாமி, இதென்னய்யா கோலம்...?”

“அதெல்லாம் ஒண்ணும் கேக்காதிய. இவுரு எஸ்.ஐ. சொல்லி அனுப்பிச்சாரு, இப்படின்னு வந்திருக்காங்கன்னு. பேத்தியயும் கூட்டிட்டு வந்திருக்கிங்கன்னாங்க. நானும் ஆசுபத்திரிக்கு இவங்களக் கொண்டுட்டுப் போவணும்னு பாக்குற. அவவ... மென்னு முழுங்கறானுவ இருக்கிற லாரி, காரு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கட்சித் தலவர் போயிட்டார்னு ஓடுறானுவ...”

அவர் கண்கள் இடுங்க, வியப்புடன் “நீங்க எப்டீம்மா வந்தீங்க?” என்று விசாரிக்கிறார்.

அவள் கையெடுத்துக் கும்பிடுகிறாள். “அதெல்லாம் இப்ப வாணாம் அய்யா. வர்ற வழி எல்லாம் சங்கட்டம். அம்மா வயித்தில இருக்கற குழந்தை, நேரம் வரப்ப எத்தினி சங்கடப்பட்டு வருது? அழகாயி மேல பாரத்தப் போட்டுட்டு வந்தோம். இங்க வந்தது... வெளி உலகக்காத்து, மூச்சு புதுசா வுடுறாப்பல இருக்கு. அய்யா...”

“நா ஒடனே இவன புதுக்குடிக்கு அனுப்பிச்சி, மருந்து கட்டுக் கட்டத் துணி, எல்லாம் கொண்டாரச் சொன்னே. எல்லாரும் கதவப் பூட்டிட்டு ஓடிட்டானுவ புதுக்குடிலகூட தீவைப்பு, அடிதடி...”

குரலைத் தாழ்த்தி “இந்தத் தெருவிலியே, உங்க மகங்கட்சி தாதா ஒருத்தன் இருக்கிறான். போலீசு புடிச்சிட்டுப் போயிருக்கு. வீட்ல பழைய சீலை துணி எல்லாம் தேடிக் கொண்டாந்து போன. ஒரு பொம்புள போலீசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/321&oldid=1050456" இலிருந்து மீள்விக்கப்பட்டது