பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25 ————————||||

உப்புமண்டித் தெரு



பனிரண்டுக்காக
ஊதி ஒய்ந்தது கூட
அந்த பணியாட்களின்
செவிகளில் நுழையவில்லை.

சமீபத்திய
தேர்தலில்
'டெபாஸிட்' இழந்தவர்களின்
பூர்வாஸ்ரமப் புராணங்களை
அவர்களின் வாய்கள்
அசைபோட்டுக் கொண்டிருந்தன...

வீட்டுக்காரர்களின்
விருந்து
அவர்களுக்கும்
எதிர்பாராத
இனாமாக
'மதிய உணவாக'க்
காத்திருந்தது...

காலையில்
அவர்கள் கொண்டு வந்த
அலுமினியத் தூக்குகளுக்குள்
தயிர்ச்சோறு
தனது
அறிதுயிலைக்
கலைக்க வில்லை