பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரேத நதியில் ஒரு பிரவாகம்...!





அவர் -
ஒரு ஆன்மிக வாதி!
ஒரு அறிவு வாதி!
அவருடைய
ஆன்மிகப் பக்தியில்
'நேர்மை' தேளாக இருந்தது!
அவருடைய
அறிவுப் பக்குவத்தில்
'கூர்மை' வாளாக இருந்தது
ஆன் மீகத்தில்
அறிவு வேதமாகவும்
அறிவு முதிர்ச்சியில்
ஆன்மிகப் பாலமாகவும்
அவர் பரிமளித்தார்!
பரிண மித்தார்!
பயன்களைக் காட்டி வந்தார்!