பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! 9 அது மிகையாகாது. ஆசிரியர் தலைமையில் அவர்தம் அருமை மாணவியார் இனிய பேச்சைக் கேட்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக எண்ணிய எனது எண்ணம் அன்று நிறைவெய்தி எனக்கு எல்லையில்லா இன்பம் நல்கியது, இங்கே தமிழறியாத திருவாட்டியார் தம் ஆசிரியரிடம் தமிழ் பயின்ற முறையினை எடுத்து விளக்குவது இனிமை தருவதாகும். முதற்கண் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளச் செய்து பின் திருக்குறள் பரிமேலழகருரை நூலைக் கையிலே கொடுத்துப் படித்துப் பொருளுணருமாறும் அதன் வழியே பிற இலக்கியங்களைக் கற்குமாறும் தம் ஆசிரியர் செய்ததைக் கலைமகளும் திருமகளும் ஒருருக் கொண்டாற் போல் விளங்கும் அம்மையாரவர்கள் இயம்பக்கேட்டு வியந்தேன். - கழகப் பொன்விழாவின் மொழி மாநாட்டிலே அந்நாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு கா. கோவிந்தன் அவர்கள் தலைமையில், நம் புலவரவர்கள் மனோன்மணிய நாடகப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் பாராட்டுரை வழங்கினர். இங்கே தம் மாணவர் தலைமையில் ஆசிரியர் பேசியது குறிப்பிடத் தக்கது. அன்று காலை விழாத் தொடக்கத்தில் மாண்புமிகு கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் புகழ்மிகு சீரிய துறைகளில் நூல்களெழுதிய கழக நூலாசிரியர் எழுவருள் ஒருவராக உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் பரிசும் பாராட்டும் பெற்றனர். - 1971 பிப்பிரவரித் திங்களில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கி. இலட்சுமிகாந்தன் பாரதி இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற கழகப் பொன் விழாவிலே உரைவேந்தர் ஒளவையவர்கள் பேராசிரியர் கா.சு. பிள்ளையவர்கள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் பேசினர். - - தாம் பாடங் கேட்ட பழகிய பெரும்புலவர்களைப் பற்றிச் செந்தமிழ்ச் செல்விக்கு எழுதி வருமாறும் திங்கடோறும் அதன் பொருட்டு ரூ.25' அனுப்புவதாகவும் புலவர் ஒளவை அவர்களை நேரிற் கண்டு சொல்லி வேண்டினேன். அதற்கு அவர்கள் 7-12:47இல் எழுதிய கடிதம் வருமாறு: - - “யான் நேரில் தெரிவித்துக் கொண்டபடி இந்தத் திசம்பர் முதல் திங்கடோறும் ரூ.25 அனுப்பியுதவ வேண்டுகிறேன். தமிழ்ப் பெருமக்கள் வரலாற்றினைத் தொடங்கிவிட்டேன். கனக சபைப் பிள்ளையவர்கள் வரலாறு கிடைத்திலது. உமாமகேசுரம் •ނ[ބޯ سއްް