பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

இருக்கின்றன. இவற்றின் அடிப்படை ஒன்றே. அதாவது அணு" என்று சொல்கிறார்கள்.

உலகம் அணு மயமானது. அணுக்கள் விலகி இலேசானால் கன வாயுவாக வான மண்டலத்தில் திரிகின்றன. குளிர்ந்தால் நெருங்கி திரவமாகின்றன. மேலும் குளிர்ந்தால் இறுகிக் கட்டியாகின்றன.


3. அணுவின் அட்டகாசம்

அணுவின் தன்மை என்ன? சும்மா இருப்பதா? அன்று. எப்பொழுதும் குதித்துக் கொண்டு இருப்பதுதான் அணுவின் தன்மை. குளிர்ச்சியான பொருளாக இருந்தால் அந்த அணு மெதுவாகக் குதிக்கும். சூடானால் வேகமாகக் குதிக்கும்.

தண்ணீரில் சூடு ஏற்றினால் கொதிக்கிறது. ஏன்? தண்ணீரில் உள்ள அணுக்கள் துள்ளிக் குதிக்கின்றன. ஓடப்பார்க்கின்றன.. புதிதாகப் பிடிப்பட்ட மீன்கள், கூடையிலிருந்து எப்படித் துள்ளுமோ, அந்த மாதிரி.