பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து குறைவாக உள்ள இடத்துக்கு மின்சக்தி ஓடும். இந்த ஓட்டத்துக்குத் தான் கரண்ட்' என்று பெயர்.

மின்சக்தியிலே பாசிடிவ் என்றும், நெகடிவ் என்றும் இரண்டு உண்டு. பாசிடிவ் என்றால் மின்சக்தி குறைவாக உள்ளது என்று பொருள்.

பாசிடிவ் என்றால் பெற்றுக் கொள்ளக் கூடியது. ஏற்கத் தக்கது; வாங்கிக் கொள்ளக் கூடியது.

நெகடிவ் என்றால், 'வேண்டாம்' என்று தள்ளுவது; புறக்கணிப்பது; விரட்டுவது; ஒதுக்குவது.

நெகடிவ் மின்சக்தி ஒரு புறமும், பாசிடிவ் மின்சக்தி மறுபுறமும் இருந்தால்--அதாவது எலக்ட்ரானும், புரொதானும் சேர்ந்தால்--என் ஆகும்?

காதலன் காதலி போல் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கட்டி அணைத்துக் கொள்ளும்.

நெகடிவ் மின் சக்தியும், நெகடிவ் மின் சக்தியும் சேருமானால்-அதாவது, எலக்ட்ரானும், எலக்ட்ரானும் சேருமானால் என்