பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

தால் திரவமாகிறது. மேலும் குளிர்ந்தால் கட்டியாகிறது.

கட்டியாயிருக்கும் பொருளுக்குச் சூடு ஏற்றினால் திரவமாகிறது. மேலும் சூடு ஏற்றினால் கனவாயுவாகிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் அணுவின் சேர்க்கையே. சூடு ஏறினால் அணுக்கள் விலகுகின்றன. குளிர் ஏறினால் இறுகுகின்றன.

அணுக்களோ பல பரமாணுக்களின் சேர்க்கை. அவை வானவெளியிலே வெகு வேகமாகப் பறந்து திரிந்து அட்டகாசம் செய்கின்றன.

பரமாணுவோ, மகத்தான மின்சக்தி பொருந்திய எலக்ட்ரான் கொண்டது. அந்த எலக்ட்ரான்களோ சூழ்நிலையையே மாற்றி விடக் கூடியவை.

ஆக, வெளியின் தன்மை இது வரை கூறப்பட்டது.

இனி, சூரியனின் பிறப்பைக் கவனிப்போம்.