பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பரமாணுக்களுக்கு நம்பர் (எண்) கொடுத்திருக்கிறார்கள்.

நீர் வாயுவின் பரமாணுக்கு நெ. 1 என்று எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன்? நீர் வாயுவின் பரமாணுதான் மிக இலேசானது. அதிலே புரொதான் ஒரே ஒரு பொறிதான் இருக்கிறது. அதன் பொருள் என்ன? ஒரே ஒரு புரொதானை காதலனை-க் கொண்ட பரமாணு என்று பொருள்.

அடுத்தபடி வருவது ஹீலீயம். அதன் பரமாணுவிலே இரண்டு காதலர்கள் இருக்கிறார்கள். அதாவது இரண்டு புரொதான்கள் உள்ளன.

ஆகவே, அதற்குப் பரமாணு நெ. 2 என்று எண் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி மொத்தம் 98 நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பரமாணுவின் சேர்க்கையே அணு ஆகும். ஆகவே, சூரியனைப் பற்றி அறிய வேண்டுமானால் இந்த அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்ளல் வேண்டும்.

அதாவது, சூரியனின் பிறப்பிடம்-வான வெளி-கனவாயு நிரம்பியது. கனவாயு குளிர்ந்