பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

யெல்லாம் ஆரய்ந்தால் ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை அறியலாம்.

வானளாவத் தோன்றும் நமது இமயமலை ஒரு காலத்தில் இல்லை; இல்லவே இல்லை. இப்போது இமயமலை உள்ள இடம் கடலாக இருந்தது. திதியன் கடல் என்று அதற்குப் பெயர்.

பிரிட்டனுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே இப்போது இருப்பது அட்லாண்டிக் மாகடல். ஆனால், அப் பகுதி ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது.

மத்திய தரைக் கடல் என்று அழைக்கிறோமே! அப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது.

அப்படியானால் இந்த மாறுதல் எப்படி ஏற்பட்டது?

ஆறுகள் என் செய்கின்றன? பூமியை அகழ்ந்து கொண்டு போய்க் கடலில் சேர்க்கின்றன. கோடிக் கணக்கான ஆண்டுகள் இப்படியே நடந்தால் என் ஆகும்? பூமியின் பாரம் ஒரு புறமிருந்தும் மற்றொரு புறம் மாறும். நிலப் பரப்பில் உள்ள பாரம் கடல் பக்கம் மாறும். கடல் பரப்பின் பாரம் அதிக மானால் அது என்ன செய்யும்? பூமியை