பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வான வீதியிலே குவிந்திருந்த மேகங்கள் குறைந்தன. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே இருந்த திரை விலகியது. சூரிய கிரணங்கள் பூமியின் மீது நேராக வீழ்ந்தன. பூமியைச் சூழ்ந்திருந்த இருள் விலகியது. வெளிச்சம் உண்டாயிற்று.

அன்று முதல் சூரியன் பூமியை வளர்க்கத் தொடங்கினான்; உருவாக்கினான். தனது மெல்லிய கரங்களால் பூமியின் உடலைத் தடவினான். தனது மின்சாரக் கதிர்களால் பூமிக்கு இன்பம் அளித்தான்.


12. மலைகள் எழுப்பின


உலகப்படம் ஒன்றைக் கவனித்தால் எத்தனையோ நாடுகளைப் பார்க்கிறோம்; கண்டங்களைப் பார்க்கிறோம்; கடல்களைப் பார்க்கிறோம்; மலைகளைப் பார்க்கிறோம்.

இவை எப்போது தோன்றின? ஒரே காலத்தில் தோன்றினவா? பல்வேறு காலங் களிலே தோன்றினவா?

பூமியின் மேல் பரப்பு கெட்டியான நாள் முதல் அப்படியே இருக்கின்றனவா? அல்லது மாறியிருக்கின்றனவா? இவற்றை