பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

அமுக்கும். நெருக்கும். அந்த நெருக்குதல் தாங்க முடியாமல் பூமி வெடிக்கிறது. நொறுங்குகிறது. பூமியின் மேல் பரப்பு வளைந்து கொடுக்கிறது. பூமிக்குள்ளே இருக்கும் கல்பாறை வேகமாக மேலே எழும்புகிறது. இப்படி எழுப்பியவைதான் மலைகள்.

இவ்விதம் பூமியின் மேல் பரப்பும் அதற்குத் தக்கபடி மாறுகிறது, சில இடங்களில் கடல் உள் வாங்குகிறது. நிலம் தோன்றுகிறது. வேறு சில பகுதிகளில் நிலப்பரப்பு கடலில் மூழ்கிவிடுகிறது. நீர் தோன்றுகிறது. இப்படித்தான் பூகோள அமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது.

பூமி தோன்றிய காலம் முதல் இதுவரை ஐந்து முறை இம்மாதிரி மாறுதல் நிகழ்ந்துளது. இந்த மாற்றத்தைப் 'புரட்சி' என்று சொல்கிறார்கள் அறிஞர்கள்.

இத்தகைய புரட்சியிலே கடைசியாக ஏற்பட்ட புரட்சி எப்போது? நான்கு கோடி ஆண்டுகள் முன்பு. அப்போதுதான் இமயமலை தோன்றியதாம்.

ஆகவே, நமது இமயமலை உலகப்