பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

போது, ஒரு பெரிய புரட்சி - பிரளயம்- தோன்றும். அதன் பிறகு மாறுதலும் தோன்றும். இவ்விதப் புரட்சி, ஐந்து முறை ஏற்பட்டிருப்பதாகப் புவி இயல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஒரு புரட்சிக்கும், இன்னொரு புரட் சிக்கும் இடையே உள்ள காலத்தை ஒரு யுகம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதற்கு 'ஜியாலாஜிகல் ஸ்கேல்' என்று பெயர், 'கால கோபுரம்' என்றும் சொல்லலாம். அந்த ஐந்து யுகங்களும் அவற்றின் பொருளும் வருமாறு:-

இங்கிலீஷ் பெயர் தமிழ்ப் பெயர்
5.சைனோ சாயக் ஈரா சமீப ஜீவ யுகம்.
4.மெஸோ சாயக் ஈரா மத்திய ஜீவ யுகம்
3. பலியோ சாயக் ஈரா பழைய ஜீவ யுகம்
2. புரடரே சாயக் ஈரா ஆரம்ப ஜீவ யுகம்.
1. ஆர்க்கியோ சாயக் ஈரா புராதன ஜீவ யுகம்

வண்டல்கள் தட்டு தட்டாக ஒன்றன் மேல் ஒன்றாகப் படியும். மிகப் பழைய