பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இரண்டு பாகங்களோ நூற்றைம்பது கோடி வருஷ வரலாறு கொண்டவை.

ஐம்பது கோடி ஆண்டு வரலாற்றினை இப்போது கவனிப்போம். இந்த ஐம்பது கோடி ஆண்டுகளும் மூன்று யுகங்கள் கொண்டவை. அம்மூன்றும், பழைய ஜீவ யுகம், மத்திய ஜீவயுகம், சமீப ஜீவயுகம் என்பவை. ஒவ்வொரு யுகமும் பல சகாப் தங்கள் கொண்டவை.

பழைய ஜீவ யுகத்தை எடுத்துக் கொள்வோம். இது ஏழு சகாப்தங்கள் கொண்டது. அந்த ஏழு சகாப்தங்களாவன:

1. கேம்ப்ரிய சகாப்தம்
2. அர்த்தோவிசிய சகாப்தம்
3. சிலூரிய சகாப்தம்
4. திவோனிய சகாப்தம்
5. மிசிசிப்பி சகாப்தம்
6. பென்சில் வேனிய சகாப்தம்
7. பெரிமிய சகாப்தம்

பெயர்களைக் கண்டு அஞ்ச வேண் டாம். சிறிது ஊன்றிக் கவனியுங்கள். எளியனவாகப் புலப்படும்.