பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அடுக்கு வரிசைகளுக்குப் 'பென்சில் வேனிய சகாப்த வரிசை' என்று பெயர் கொடுத்தார்கள்.

'பெர்மியா' என்பது ரஷியாவிலே உள்ள ஓரிடம். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அந்த மாதிரி அடுக்கு வரிசைகளுக்குப் பெர்மிய சகாப்த வரிசை என்று பெயர்.

இனி, மத்திய ஜீவயுகத்தைக் கவனிப்போம். இதிலே மூன்று சகாப்தங்களே. ‘திரையாசிக் சகாப்தம்', 'ஜூராசிக் சகாப்தம்', 'கிரிடேசியஸ் சகாப்தம்' என அம் மூன்றும் அழைக்கப்படுகின்றன.

திரியோதசி என்றால் நமக்குப் பொருள் தெரியும். திரிமூர்த்தி என்றாலும் நாம் அறிவோம். அதே மாதிரி 'திரையாசிக்' என்றால் முப்பிரிவு என்று பொருள்.

‘திரையாசிக் ஏஜ்' என்றால் 'முப்பிரிவு சகாப்தம்' என்று பொருள். அதாவது இந்த சகாப்தத்திலே இருந்த உயிர்களின் உடல் முப்பிரிவுகளாக இருந்தனவாம். எனவே, 'திரையாசிக்' என்று பெயர் கொடுத்தார்கள்.

பிரான்சுக்கும் சுவுட்ஜர்லந்துக்கும் இடையே ஒரு மலைத்தொடர் இருக்கிறது. அதற்கு