பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65

ஜூரா மலைத்தொடர் என்று பெயர். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அம்மாதிரி பாஸில்களுக்கு ஜூராசிக் சகாப்த வரிசை என்று பெயர்.

லத்தீன் மொழியிலே கிரீடர்' என்றால் சாக்கட்டி என்று பொருள். கிரிடேசியஸ் ஈரா என்றால் சாக்கட்டி சகாப்தம் என்று பொருள்.


15 சிறு உயிர் இனங்களின் பவனி

இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதிலே தாம் எல்லாரும் நடிகர். வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறோம். இயற்கையின் விளையாட்டாகிய இந்த நாடகம் உலகம் தோன்றிய காள் முதலாக நடந்து கொண்டே யிருக்கிறது. எப்போது முடியும் என்று சொல்ல எவராலும் இயலாது.

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டுடையார்’ என்கிறார் கம்பர்.

இந்த விளையாட்டு மேடை பற்றித்தான் இது வரை சொல்லப்பட்டது. மேடை கண்டோம். அதன் ஜோடிப்பு கண்டோம்.