பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

இல்லை. சப்தங்களின் மூலம் ஒன்றுக் கொன்று உணர்ச்சி தெரிவித்துச் சேர்ந்து வாழும் உணர்வு இல்லை. சகோதரப் பிராணிகளின் உள்ளத்திலே அன்புணர்ச்சி எழுப்பும் திறமையே இல்லை.

பழைய - சென்று போன - யுகத்தின் நிலைமை இது. ஆனால் புது யுகம்- அதாவது சமீப ஜீவ யுகம் இதற்கு நேர் மாறானது.

இந்த யுகத்திலே தோன்றிய பிராணிகள் குட்டி போட்டன; பால் கொடுக்கத் தொடங்கின. பறவைகள் முட்டையிட்டன. முட்டை யைப் பாதுகாத்து தம் குஞ்சு என்ற ஆசையுடன் பேணி வளர்த்தன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இந்த இனங்கள் சென்ற யுகத்திலும் இருந்தன என்றாலும் அந்த அசுரப் பிராணிகளுக்குப் பயந்து அடங்கி, ஒடுங்கி, இருக்கும் இடம் தெரியாமல் இவை இருந்தன. அசுரப் பிராணிகள் மறைந்து ஒழியவே புதிய யுகத்திலே இவை பிரமாதமான உருவும் அறிவும் பெற்று வளர்ந்தன.

ஊர்வன, நடப்பன, பறப்பன ஆகிய எல்லா உயிர் இனங்களும் இந்த யுகத்திலே தோன்றின.