பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆகவே, குரங்குகளுடன் தோன்றிப் படிப்படியாக மாறி இன்றைய மனிதன் தோன்றினான்.

இவ்விதமாகச் சென்ற ஐம்பது கோடி வருஷ வரலாற்றினை அறிந்தோம். இனி இருள் படிந்த அந்த நூற்றைம்பது கோடி வருஷ சரித்திரத்தைக் கவனிப்போம்.

ஆதியில் எப்படி உயிர் தோன்றியது? கவனிப்போம்.


20. ஒன்றே குலம்


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றார் திருமூலர். குலம் என்றால் எது? மனித குலம் மட்டுமா? அன்று.

திருமூலர் அவ்வளவில் நிற்கவில்லை. விரிந்த பார்வை கொண்டார். அகன்ற உலகைப் பார்த்தார். உலகில் வாழும் உயிர்களைப் பார்த்தார்; ஊடுருவி நோக்கினார்.

வானிலே பறப்பன கண்டார்; கானிலே திரிவன கண்டார்; ஊர்வன கண்டார்; தவழ்வன கண்டார். புல் கண்டார். பூண்டு