பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

கண்டார். எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டார்.

எல்லாவற்றிலும் ஒன்றே கண்டார்; யோகக் கண்களால் கண்டார். ஒன்றே குலம்’ என்றார்.

இன்று விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு திரு மூலம் கண்ட உண்மை இப்போது அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது. அன்று திருமூலர் தம் யோகக் கண்களால் கண்டார். இன்று விஞ்ஞானம்,பூதக் கண்ணாடி மூலம் காண்கிறது.

களிமண் இருக்கிறது. அதைக் கொண்டு எவ்வளவு அழகான மண் பாண்டங்களைச் செய்கிறார்கள்.

பானை, சட்டி, கூஜா இப்படி எவ்வளவோ அழகான பொருள்களைச் செய்கிறார்கள்.

இவை எல்லாம் வேறு வேறாகக் காட்சி தருகின்றன. எனினும் இவற்றின் அடிப்படை எது? களிமண்தானே. களிமண் தான் சட்டியாகவும், பானையாகவும், கூஜாவாகவும் காட்சி அளிக்கிறது. அளித்த போதிலும் அகத் தோற்றத்தில் எப்படி? மண்.