பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கங்காரு என்பார்கள். சாம்பல் நிறக் கங்காரு, எலிக் கங்காரு, வலபி—இப்படிச் சிலவகை உண்டு. சாம்பல் நிறக் கங்காரு நல்ல உயரமாக இருக்கும். ஆனால், அது எங்களைப் போல் புல்வெளியில் வசிப்பதில்லை. மரங்கள் அடர்ந்த இடத்தில்தான் வசிக்கும்.

வலபி, எலிக் கங்காகு—இவைகளெல்லாம் சிறிதாயிருக்கும். எங்களைப் போல் வேகமாகப் பாய்ந்து செல்ல அவைகளால் முடியாது. ஆபத்து என்றல், புதருக்குள் ஒளிந்து கொள்ளும்.

ஆஸ்திரேலியாவின் மத்திய பாகத்திலே சில காட்டு ஜாதியார் வசிக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால், ஆதிகாலத்து மனிதர்கள் இப்படித் தான் இருந்திருப்பார்களோ! என்று நீங்கள் நினைத்துவிடுவீர்கள். அவர்கள் துணி உடுத்த மாட்டார்கள்; அவர்களுக்கென்று வீடு வாசல் எதுவுமே கிடையாது. அடிக்கடி இடம் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தேவையான போது, இலை தழைகளால் கொட்டகை போட்டுக்கொண்டு, அங்கே தங்குவார்கள்.

குறி பார்த்து ஈட்டி எறிவதில் அவர்கள் சூராதி சூரர்கள்! அவர்களைப் பார்த்தாலே எங்களுக்குப் பயம்! எங்களுடைய மாமிசம் அவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அத்துடன், எங்களுடைய தோல் மிருதுவாகவும் உறுதியாகவும் இருப்பதால், எங்கள் உயிருக்கு அவர்கள் எமனாகி விடுகிறார்கள்!

நாங்கள் யாருடனும் வீண் வம்புக்குப் போக மாட்டோம். அப்படியிருந்தும், வேட்டைக்கா