பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 கான் தேவைக்கு மேல் சாப்பிட்டது எவ்வளவு என் பதை, என்னுடைய திமிலைப் பார்த்தே கண்டு பிடித்து விடலாம். கொழுப்பாக அது அங்கே இருக்கும். - பாலைவனத்தில் செல்லும்போது பல காட் களுக்கு உணவு கிடைக்காது. அப்போது என் திமிலில் இருக்கும் கொழுப்பு உதவியாயிருக்கும். எனக்கு வேண்டிய சத்து அங்கிருந்து கிடைக்கும். நாள் ஆக ஆக, திமில் சிறுத்துக்கொண்டே வரும். கடைசியில் அது தொய்ந்து போய் முதுகோடு ஒட்டிக் கிடக்கும். தண்ணிர் கிடைக்கும் போதும் இப்படித்தான் செய்வேன். அளவுக்கு மேல் குடித்துவிடுவேன். என் வயிற்றிலே தேன் கூடு போல் பல அறைகள் உள்ளன. அந்த அறைகளில் தண்ணிர் தேங்கி கிற்கும். அந்த அறைகளிலிருந்து தேவையான தண்ணிரை எடுத்துக்கொள்வேன். இதனுல், பல காட்கள் தண்ணீர் குடிக்காமலே என்னுல் காலம் தள்ள முடிகிறது. வறண்ட பாலைவனத்தில் சில முள்செடிகள் வளர்வதுண்டு. அந்தச் செடிகளைப் பார்த்தால் கான் விடமாட்டேன். அடடே, அதிலுள்ள முட்கள் காக்கைக் குத்திவிடுமே! வாயைக் கிழித்து விடுமே!’ என்று கவலைப்படுகிறீர்களா? கவலைப் படாதீர்கள். அந்த முட்கள் எங்களை ஒன்றுமே செய்வதில்லை. குள்ளமாக அங்கே ஒரு முள் செடி இருக்கிறது. அதற்குப் பெயர் என்ன தெரியுமா? ஒட்டக முள்செடி! எங்களுக்குப் பிரியமான செடி யாக இருப்பதால்தான் அதற்கு அப்படிப் பெயர் வைத்துவிட்டார்கள் !