பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 ஆடுமாடுகளைப் போல் கானும் அசைபோடும் மிருகம்தான். கிடைக்கும் உணவை அப்படியே விழுங்கிவிடுவேன். பின்னர் சாவதானமாக, விழுங் கிய உணவை வாய்க்குக் கொண்டுவந்து பற்க ளால் கன்றுக மென்று தின்பேன். எனக்கு நீந்தத் தெரியாது. ஒடும் தண்ணிரைக் கண்டாலே பயம்தான் ! கான் என்ன, தண்ணிர்க் கப்பலா? பாலைவனக் கப்பல்தானே! பாலைவனத் தில் தண்ணிரைக் கடக்கவேண்டிய தேவையே வருவதில்லை. பாலைவனத்தில் பகல் கேரத்திலே வெய்யில் மிகமிக அதிகம். பாலைவனத்தில் பல ஆண்டு களாக வாழும் என் எஜமானர்கூட நடுப்பகலில் வெளியே தலைகாட்ட மாட்டார். அவரும், அவர் குடும்பத்தாரும் கூடாரத்திற்குள்ளே தங்கியிருப் பார்கள். ஆனுல், நான் சூரியனுக்குப் பயப்படுவதே இல்லை. கடுமையான வெய்யிலில்கூட நான் வெட்ட வெளியில்தான் படுத்திருப்பேன். பாலைவனத்தில் அடிக்கடி சூருவளி வீசும். அந்தக் காற்று மணலை வாரி வாரி இறைக்கும். அப்போது கான் தரையிலே கழுத்தை கன்ருக நீட்டிப் படுத்துக்கொள்வேன். கண்களையும், மூக்கையும் இறுக மூடிக் கொள்வேன். கண்களை மூடுவதற்குத்தான் கண் இமைகள் இருக்கின்றன. மூக்கை எப்படி மூட முடியும் ?” என்றுதானே கேட்கிறிர்கள் ? என் மூக்கைக் கூர்ந்து பாருங்கள். அது அகலமாகவோ அல்லது வட்டமாகவோ இருக்கிறதா? இல்லையே! உண்டி யல் பெட்டியில் ஒட்டை இருப்பது போலத்தான் என் மூக்கும் இருக்கிறது ! அதனுல் மணற்