பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

என்னைப் பார்த்தவுடனே, “என்ன இது! எல்லா மிருகங்களுக்கும் தலைக்கு மேலே கொம்பு இருக்கும். இந்த மிருகத்துக்கு மூக்குக்கு மேலே கொம்பு இருக்கிறதே!” என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்? ஆனால், என் மூக்குக்கு மேலே இருப்பது உண்மையான கொம்பல்ல; உரோமங்கள் தான் ஒன்று திரண்டு கெட்டியாக இறுகிக் கொம்பு போல் தெரிகின்றன. ஆனாலும், அதற்கு வேறு ஒரு பெயர் கிடையாது. அதனால்,நானும் அதைக் ‘கொம்பு’ என்றே கூறிவருகிறேன்.

தலைக்கு மேலே கொம்புகள் இல்லாத போனாலும், அவை இருக்கவேண்டிய இடத்தில் காதுகள் இருக்கின்றனவே, கவனித்தீர்களா?