பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கூடியதாகவும் இருக்கும். சவுக்கு செய்வதற்கு எங்களுடைய தோலைப் போல் வேறு தகுதியான தோல் இந்த உலகத்திலேயே இல்லையாம்!

எட்டு மாதம் சுமந்து பெற்றேன் என் அருமைக் குழந்தையை. அது நடப்பதற்கு முன்பே நீந்த ஆரம்பித்துவிட்டது! சில சமயங்களில் நான் அதை என் முதுகில் சுமந்து கொண்டே நீந்துவேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அக்காட்சி வேடிக்கையாயிருக்கும். வாத்து தண் ணீரில் நகருவதுபோல், என் குழந்தையும் தண்ணீரில் தானாக நகருகிறதோ என்றுகூடச் சிலர் சந்தேகப்படுவார்கள். என் குழங்தைக்குப் பசி எடுத்தால், தண்ணீரில் இறக்கிவிடுவேன். தண்ணீருக்குள் இருந்தபடியே அது என்னிடம் பால் குடிக்கும்!

ஆனாலும், எத்தனை நாட்களுக்குப் பாலைக் குடித்துக்கொண்டே இருப்பது? இரை தேடத் தெரியவேண்டாமா? இன்னும் சில நாட்கள் சென்றதும், நான் அதை இரவு நேரத்தில் வெளியிலே அழைத்துச் செல்வேன். எங்கெங்கே உணவு கிடைக்கும் என்பதையும் சொல்லிக் கொடுப்பேன்.

இதையெல்லாம் நான்தானே சொல்லிக் கொடுக்க வேண்டும்? வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?