பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


7 : கதி அதோ கதிதான் ! படகைக் கவிழ்த்து, உள்ளே இருக்கும் எல்லோரையும் மூழ்கடித்து விடுவோம்.

நானும் என் இனத்தவரும் பயிர்களே காசம் செய்வதால், குடியானவர்களுக்கெல்லாம் எங்கள் மீது சொல்ல முடியாத கோபம். எங்களில் எத்த இனயோ பேரை அவர்கள் வேட்டையாடிக் கொன்றுவிட்டார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள பூர்வ குடி மக்களுக்கு எங்கள் மாமிசம் மிகவும் பிடிககும். அதற்காகவும் அவர்கள் வேட்டையாடுவார்கள் எங்களுடைய தந்தப் பற்களுக்கு முன்பெல் லாம் அதிக கிராக்கி இருந்தது. யானைத் தந்தத் தைப் போல் அதிலும் பல சாமான்கள் செய்து வந்தார்கள். இப்போது அதற்கு அவ்வளவு கிராக்கியில்லை. எங்களுடைய தோலுக்குத்தான் இப்போது மதிப்பு அதிகம். மற்ற மிருகங்களின் தோல்களேயெல்லாம் பதனிட்டு உபயோகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், சில நாட்களில் கரடு முரடாகிவிடும். ஆணுல், எங்களுடைய தோல் எப்போதும் வழவழப்பாகவும் எளிதில் வளையக்