இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23. விசிறி
ஓங்கி உயர்ந்த பனைமரமாம்;
உச்சியில் ஓலைக் குருத்தழகாம்;
பாங்காய் அதனைக் கொய்திடுவார் ;
பக்குவ மாக வகிர்ந்திடுவார்.
அழகாய் விசிறி கட்டிடுவார் ;
அலங்கா ரங்கள் செய்திடுவார்;
ஒழுங்காய்க் கடையில் வைத்திடுவார்;
ஒவ்வொன் றாக விற்றிடுவார்.
மிக்க வெய்யிற் காலத்தில்
வியர்வை ஒழுகும் தேகத்தில்.
மக்கள் விசிறி வாங்குவரே;
மகிழ்வாய் இரவில் தூங்குவரே.
24