இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
34.பொன் முரசு
கொட்டிடு கொட்டிடு முரசே-எங்கள்
கொள்கை இதுவென்று முரசே.
வித்தையில் வல்லவர் ஆவோம்-மிக்க
வீரர்கள் என்னவே வாழ்வோம் ;
நித்தமும் கொட்டிடு முரசே-எங்கும்
நிற்காமல் கொட்டிடுமுரசே.
(கொட்டிடு)
அண்ணனும் தம்பியும் போலே-நாங்கள்
அன்புடன் இங்கிருப் போமே ;
திண்ணம் இதுகொட்டு முரசே-ஒரு
தீங்கு புரிந்திடோம் முரசே.
(கொட்டிடு)
ஏழை பணக்காரர் என்றே-இல்லை
எங்களுக் குள்யாரும் ஒன்றே ,
தோழர்கள் நாங்கள் நன்முரசே-கொட்டு
தொம்தோம் எனவேபொன் முரசே.
(கொட்டிடு)
உண்மை உரைத்திட அஞ்சோம்-உண்ணும்
உணவுக் கொருநாளும் கெஞ்சோம் ;
‘தண்தண தணதண’ எனவே-சற்றும்
தயங்காமல் கொட்டிடு முரசே.
(கொட்டிடு)
40