பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கலகல கலஎனக் கண்டு நகைத்தான்
காளை ஜயசிங்கன் ;
பலமது கொண்டே சிங்கம் போலே
பாய்ந்தான் ஜயசிங்கன்.

5

துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத்
துவங்கிய தேகுதிரை ;
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பாய்ந்திடுமே குதிரை.

6

அஞ்சா வீரன் அச்சம் இன்றி
அமைதியின் இருந்தனனே :
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே
நின்றோர் வருந்தினரே.

7

காடும் மேடும் கடுகி நடந்தே
களைத்திடு மேகுதிரை !
ஓடி ஓடி உள்ளம் சலித்தே
ஒய்ந்ததுவே குதிரை !

8

'தொம்தோம்' எனவே தோள்களைக் கொட்டினன்
தோழன் முகம்மது கான்.
தந்தோம் தந்தோம் வரிசைகள் என்றான்
மன்னன் ஷா இனஷா

9

தந்தை வந்தே தழுவிக்கொண்டார்
தநயன் ஜயசிங்கை :
வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென
வாழ்த்தினர் ஜயசிங்கை.

1O

59